பாராளுமன்ற உறுப்பினர்  அஜித் மான்னப்பெருமவின் வலது கால் துண்டிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் வலது கால் துண்டிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் வலது கால் துண்டிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 11:49 am

வாகன விபத்தில் காயமடைந்த   ஐக்கிய தேசிய கட்சியின் கம்பாஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் வலது கால் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

தெற்கு அதிவேக வீதியில்   பாராளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம்  நேற்று விபத்துக்குள்ளானது.

விபத்தினால் பாராளுமன்ற உறுப்பினரின் வலது காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக   தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நேற்று பாராளுமன்ற உறுப்பினருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும்  அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும  தற்போது தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்