தலவாக்கலையில் மாணவியை காணவில்லை; விசாரணைகள் ஆரம்பம்

தலவாக்கலையில் மாணவியை காணவில்லை; விசாரணைகள் ஆரம்பம்

தலவாக்கலையில் மாணவியை காணவில்லை; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 1:51 pm

தலவாக்கலையில் 15 வயது மாணவி காணாமற்போனமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை பொலிஸ் பிரிவின் வட்டக்கொடை மடக்கும்புர  கீழ் பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரே காணாமல் போயுள்ளார்.

வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்ற   மாணவி வீடு திரும்பாதையடுத்து அவரது உறவினர்கள், அயலவர்களின் உதவியுடன் தேடுதலில் ஈடுபட்டும் எவ்வித தகவலும் கிடைக்காததால் பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதேவேளை மாணவி காணாமல்போய் நான்கு தினங்களின் பின்னரே    முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கமைய இன்று விசேட பொலிஸ் குழுவொன்று மாணவி காணாமற்போன பகுதிக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்