தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் கொலை; ஐவர் விளக்கமறியலில்

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் கொலை; ஐவர் விளக்கமறியலில்

தமிழகத்தில் இலங்கை அகதி ஒருவர் கொலை; ஐவர் விளக்கமறியலில்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 12:08 pm

தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் இலங்கை அகதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

56 வயதான குறித்த இலங்கை பிரஜை திருச்சி கருமண்டபம் பகுதியில் செப்டெம்பர் முதலாம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் தமிழக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

நிதி மோசடி தொடர்பான தகவல்களை குறித்த இலங்கையர் வெளியிடலாம் என்ற அச்சத்தினால் சந்கேநபர்கள் இந்த குற்றச் செயலை புரிந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்