கொழும்பின் பல பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் சாத்தியம்

கொழும்பின் பல பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் சாத்தியம்

கொழும்பின் பல பகுதிகளில் தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் வழமைக்கு திரும்பும் சாத்தியம்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 8:52 am

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பல பிரதேசங்களுக்கு நீர் விநியோகிக்கும் பிரதான குழாயில் ஏற்பட்டிருந்த வெடிப்பை திருத்தும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

எவ்வாறாயினும் கொழும்பில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ள பகுதிகளுக்கான நீர் விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் மூன்று மணித்தியாலங்கள் செல்லலாம் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

நீர் குழாய் திருத்தப் பணிகளால் கோட்டே மாநகர சபை பிரதேசம், மஹரகம நகர சபை பிரதேசம், கெஸ்பேவ நகர சபை பிரதேசம், பத்தரமுல்லை, பொரலஸ்கமுவ, கிருலப்பனை     திம்பிரிகஸ்யாய மற்றும் நாரஹேன்பிட்ட   உள்ளிட்ட பல பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

கொழும்பு ஆறு, கொழும்பு ஏழு, கின்ஸி வீதி, கொட்டா வீதி, காசல் வீதி ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்