கத்தி இசை வெளியீடு செப்டெம்பர் 18; சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு

கத்தி இசை வெளியீடு செப்டெம்பர் 18; சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு

கத்தி இசை வெளியீடு செப்டெம்பர் 18; சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 4:51 pm

‘கத்தி’ இசை இம்மாதம் 18ஆம் திகதி வெளியாகும் என்று ஈரோஸ் நிறுவனத்தின் தென்னந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் ‘கத்தி’ படத்தின் இசையை பலகோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ஈரோஸ் நிறுவனம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘கத்தி’. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் இசை உரிமையை வாங்குவதற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்தியில் முன்னணி நிறுவனமான ஈரோஸ் நிறுவனம் ‘கத்தி’ இசையினை பெரும்விலை கொடுத்து வாங்கியிருக்கிறது.

‘மாற்றான்’, ‘கோச்சடையான்’ போன்ற படங்களை விநியோகத்தை மாத்திரமே செய்து வந்த ஈரோஸ் நிறுவனம், ‘கத்தி’ இசையின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் இசை நிறுவனமாகவும் கால் பதித்துள்ளது.

‘கத்தி’ இசை மட்டுமன்றி, படத்தினையும் ஈரோஸ் நிறுவனம் மூலமாக வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ‘கத்தி’ இசை செப்டெம்பர் 18ஆம் திகதி வெளியாகும் என்று ஈரோஸ் நிறுவனத்தின் தென்னிந்திய மேலாளர் செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்