ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 9:03 am

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 27 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ளது

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகளின் விசாரணை குழுவினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பான தகவல்கள் இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் இன்று வரை குறித்த முன்னெடுக்கப்பட்ட விசாரணை தொடர்பான தகவல்கள் இவ்வாறு வெளியிடப்படவுள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த வருடத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இன்று ஆரம்பமாகவுள்ள கூட்டத் தொடர் அமைந்துள்ளதென இலங்கைமனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு வருடங்களாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்து வந்த நவனீதம் பிள்ளை ஓய்வு பெற்றுள்ள நிலையில் புதிய ஆணையாளராக பதவியேற்றுள்ள ஜோர்தான் இளவரசர் ஷெய்த் அல் ஹுசைன் இன்று ஆரம்பவுரை நிகழ்த்தவுள்ளார்.

ஆணையாளர்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை தொடர்பான விசாரணைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று கருத்துக்களை வெளியிட்டதன் பின்னர் இலங்கை சார்பிலும் பதிலுரை நிகழ்த்தப்படவுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகவுள்ள ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  ஐ.நா மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஐ,நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு தாம் மிகுந்த முக்கியத்துவம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் முன்னிட்டு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்னா முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் என ஷெய்த் அல் ஹுசைன் தெரிவித்ததாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்