ஐ.எஸ்க்கு எதிரான தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.எஸ்க்கு எதிரான தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

ஐ.எஸ்க்கு எதிரான தாக்குதல் திட்டத்தை வகுத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 12:30 pm

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல் திட்டத்தை பரக் ஒபாமா வகுத்துள்ளார்.

ஐஸ் கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா வலுவிழக்கச் செய்யும் எனக் கூறியுள்ள பரக் ஒபாமா அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை குறைத்து தோற்கடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தொலைகாட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

அண்மையில் ஐஎஸ் கிளர்ச்சியாளர்கள் தொடர்பாக வினவிய போது தந்திரோபாய திட்டங்கள் எதுவும் இதுவரை தம்மிடம் இல்லை என ஒபாமா கூறியமை விமர்சனங்களை தோற்றுவித்திருந்தது

இதேவேளை ஐஎஸ் கிளர்ச்சியாளர்களை இலக்குவைத்து முதல் முறையாக ஈராக்கியின் மேற்குப் பிராந்தியத்தில் அமெரிக்கா விமானத் தாக்குதல்களை நடத்தியிருந்தது.

இதேவேளை, ஐஎஸ் கிளர்ச்சியளார்களை ஒடுக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக அரபு லீக் உறுதி அளித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்