இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – ஷெயித் ராஅத் அல் ஹூசைன்

இலங்கை தொடர்பான விசாரணைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் – ஷெயித் ராஅத் அல் ஹூசைன்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 8:53 pm

இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பான புதிய ஆணையாளர் ஷெயித் ராஅத் அல் ஹூசைன் (Zeid-Ra’ad-Al-Hussein) தெரிவிக்கின்றார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரி​மை பேரவையின் 27ஆவது அமர்வில் இன்று கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 27ஆவது அமர்வு ஜெனீவாவில் இன்று ஆரம்பமானது.

உயர்ஸ்தானிகராக பதவியேற்றதன் பின்னர் ஷெயித் ராஅத் அல் ஹூசைன் அமர்வில் உரையாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

”இலங்கை தொடர்பான விசாரணைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதுகின்றேன். மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலம் இது தொடர்பான அறிக்கையை எதிர்காலத்தில் முன்வைக்கும். நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஒத்துழைப்புடன் செயற்பட இலங்கை அதிகாரிகளை ஆர்வப்படுத்த எண்ணுகின்றேன். இலங்கையில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும், சாட்சியமளிப்போருக்கும், பிரதிவாதிகளுக்கும் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்கள் குறித்து நாம் தொடர்ந்தும் அவதானித்து வருகிறேன். அதேபோன்று சிறுபான்மையான முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களின் மீதான வன்முறைகள் தொடர்பில் எனது கவலையை தெரிவிக்கின்றேன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்