இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கிய சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கிய சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கிய சுப்ரமணிய சுவாமிக்கு எதிராக வழக்குத் தாக்கல்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 7:09 pm

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமிக்கு எதிராக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை அரசால் தொடர்ச்சியாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பில் சுப்ரமணிய சுவாமி அண்மையில் தெரிவித்த கருத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுப்ரமணியம் சுவாமிக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் தமிழக முதல்வரால் இன்று  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும் இந்திய படகுகளை பறிமுதல் செய்யுமாறு  இலங்கை அரசுக்கு தாம் ஆலோசனை வழங்கியதாக அண்மையில் சுப்ரமணியம் சுவாமி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்