இயக்குநர் அட்லீ- நடிகை ப்ரியா நிச்சயதார்த்தம்.. ஆர்யா- நயன்தாரா வாழ்த்து!

இயக்குநர் அட்லீ- நடிகை ப்ரியா நிச்சயதார்த்தம்.. ஆர்யா- நயன்தாரா வாழ்த்து!

இயக்குநர் அட்லீ- நடிகை ப்ரியா நிச்சயதார்த்தம்.. ஆர்யா- நயன்தாரா வாழ்த்து!

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 10:11 am

ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீக்கும், நடிகை ப்ரியாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி படம் இயக்கி பிரபலமானார். இப்போது விஜய்யை வைத்து படம் இயக்கும் அளவுக்கு முக்கியமான இயக்குநராகியுள்ளார்.

இவருக்கும் சின்னத்திரையில் அறிமுகமாகி, இப்போது பெரிய திரையில் நடித்துவரும் பிரியாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்தவர் ப்ரியா. கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்தில் கார்த்திக்கு தங்கையாக நடித்துள்ளார்.

அட்லி – பிரியா திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. நடிகர் ஆர்யா, நடிகை நயன்தாரா உள்பட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணம் நவம்பர் மாதம் 9 திகதி சென்னையில் நடைபெறவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்