அவுஸ்திரேலிய இருபதுக்கு- 20 அணித் தலைவராக ஏரன் பின்ஞ் நியமனம்

அவுஸ்திரேலிய இருபதுக்கு- 20 அணித் தலைவராக ஏரன் பின்ஞ் நியமனம்

அவுஸ்திரேலிய இருபதுக்கு- 20 அணித் தலைவராக ஏரன் பின்ஞ் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

08 Sep, 2014 | 1:30 pm

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் இருபதுக்கு- 20 போட்டிகளுக்கான புதிய தலைவராக ஏரன் பின்ஞ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருபதுக்கு- 20  போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து ஜோர்ஜ் பெய்லி நேற்று விலகியிருந்த நிலையில் புதிய தலைவர் பெயரிடப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிக்பாஸ் கிரிக்கெட் தொடரில் மெல்பேர்ன் ரனகேட்ஸ் அணியின் தலைவராக ஏரன் பின்ஞ் செய்யப்பட்டிருந்தார்.

சர்வதேச இருபதுக்கு- 20  போட்டிகளுக்கான தரப்படுத்தலில் முதல் இடத்திலுள்ள ஏரன் பின்ஞ் கடந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஏ அணிக்கும் தலைமை தாங்கியிருந்தார்.

இதன்பிரகாரம் பாகிஸ்தான் அணிக்கெதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு- 20  போட்டிகளுக்கான அவுஸ்திரேலிய அணியின் தலைவராக அவர் செயற்படவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்