ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை தடுக்க நேட்டோ உறுப்பு நாடுகள் தயார் – ஒபாமா

ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை தடுக்க நேட்டோ உறுப்பு நாடுகள் தயார் – ஒபாமா

ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை தடுக்க நேட்டோ உறுப்பு நாடுகள் தயார் – ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

06 Sep, 2014 | 11:46 am

ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு நேட்டோ உறுப்பு நாடுகள் தயாராகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கூறியுள்ளார்.

ஐஎஸ் கிளர்ச்சியாளர்களின் பலத்தை குறைப்பதற்கும் அவர்களை அழிப்பதற்கும் நாடுகள் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் சிரியாவிற்குள் தரைவழியாக எந்தவொரு அமெரிக்க படையினரும் அனுப்படமாட்டார்கள் என பரக் ஒபாமா மீண்டும் உறுதி அளித்துள்ளார்.

வேல்ஸ்சில் நடைபெற்ற நேட்டோ உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே பரக் ஒபாமா இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்