யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை

யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை

யுவதியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, கொலை செய்த வைத்தியருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 11:43 am

யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி ஆறாம் மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்த மொனராகலையைச் சேர்ந்த சமிலா திசாநாயக்க என்ற யுவதியை 2007ஆம் ஆண்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்ததாக குறித்த வைத்தியருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்ட நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.

அத்தோடு பாலியல் துஷிரயோக குற்றத்திற்காக குற்றவாளிக்கு மேலும் 15 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்