யுக்ரேன் கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர யுத்த நிறுத்தம்

யுக்ரேன் கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர யுத்த நிறுத்தம்

யுக்ரேன் கிழக்கு பிராந்தியத்தில் நிரந்தர யுத்த நிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 4:40 pm

யுக்ரேனின் கிழக்கு பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்களுடன் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த யுக்ரேன் இணக்கம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதியுடன் மேற்கொண்ட தொலைபேசி கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாக யுக்ரேயன் ஜனாதிபதி பெட்ரோ பேர்சென்கோ குறிப்பிட்டுள்ளார்.

சமாதானத்தை ஏற்படுத்துதற்கான நடவடிக்கைகள் முன்னெடுப்பது தொடர்பில் இரண்டு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பர புரிந்துணர்வை எட்டியுள்ளனர்.

எஸ்டோனிய தலைநகரில் பால்டிக் பிராந்திய தலைவர்களை அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சந்தித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்