மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகுமாறு தேர்தல் ஆணையாளருக்கு அழைப்பு

மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகுமாறு தேர்தல் ஆணையாளருக்கு அழைப்பு

மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகுமாறு தேர்தல் ஆணையாளருக்கு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 2:03 pm

மனித உரிமை ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமாகுமாறு தேர்தல் ஆணையாளருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள் பலவந்தமாக தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படுவதாக கிடைத்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காகவே தேர்தல்கள் ஆணையாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஊவா மாகாணத்தில் கணக்கெடுப்பு  நடத்தப்படவுள்ளதாக தெரிவித்து சமுர்த்தி அதிகாரிகள் உட்பட அரச ஊழியர்கள் சிலருக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி மனித உரிமைகள் ஆணைக்குவில் முறைப்பாடு செய்திருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உரிய முறையில் செயற்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித் ஹேரத் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் வினவியபோது நாளை மனித உரிமைகள்  ஆணைக்குழுவிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் தொடர்பாக எமது செயலகம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்