மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் ஆரம்பம்

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பஸ் சேவை 25 வருடங்களின் பின்னர் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 4:12 pm

சுமார் 25 வருடங்களின் பின்னர் மட்டக்களப்பில் இருந்து ஊர் வீதி வழியாக கொக்கட்டிச்சோலைக்கு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பயணிகள் வீதிப் போக்குவரத்து அதிகார சபையினால் இந்த பஸ் சேவை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது.

யுத்த சூழல் காரணமாக 1990ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பில் இருந்து  கொக்கட்டிச்சோலை வரையான ஊர் வீதி வழியான பஸ் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்த பஸ் சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைய, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் கொக்கட்டிச்சோலைக்கும் இடையிலான ஊர் வீதி பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கான நிகழ்வு ஆரையம்பதி சந்தியில் இன்று காலை இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் ஆரம்பிக்கும் இந்த பஸ் சேவை கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தின் ஊடாக திரும்பி, ஊர்வீதி வழியாக காத்தான்குடி ஊர்வீதி, ஆரையம்பதி ஊர்வீதி, காங்கேயனோடை, மாவிலங்கத்துறை, ஒல்லிக்குளம் மற்றும் மண்முனைப்பாலத்தின் ஊடாக கொக்கட்டிச்சோலையை சென்றடையும் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்