போலி கடனட்டையில் 69 இலட்சத்திற்கு மதுபானம் கொள்வனவு; மலேஷிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்

போலி கடனட்டையில் 69 இலட்சத்திற்கு மதுபானம் கொள்வனவு; மலேஷிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்

போலி கடனட்டையில் 69 இலட்சத்திற்கு மதுபானம் கொள்வனவு; மலேஷிய பிரஜைகளுக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 6:54 pm

போலி கடனட்டைகளை பயன்படுத்தி 69 இலட்சம் ரூபா பெறுமதியுடைய ஐந்து வெளிநாட்டு மதுபான போத்தல்களை கொள்வனவு செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதான மலேஷிய பிரஜைகள் நால்வரும் எதிர்வரும் 17ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

சந்தேகநபர்கள் நால்வரும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை அதில் ஒரு சந்தேகநபர் எச்.ஐ.வி தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த சந்தேகநபருக்கு சிறைச்சாலை மருத்துவமனையின் பிரத்தியேக பிரிவில் சிகிச்சை வழங்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இதுவரை நிறைவடையவில்லை என குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை அடுத்து சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்