தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளரை தாக்கும் டேல் ஸ்டெய்ன் (Video)

தென்னாபிரிக்க விக்கெட் காப்பாளரை தாக்கும் டேல் ஸ்டெய்ன் (Video)

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 3:57 pm

தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் சிறந்த பந்துவீச்சாளர் மட்டுமல்ல நடிகர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணியுடனான ஒரு நாள் போட்டியின் போது நடந்த சம்பவம் இதனை பறைசாற்றுகிறது.

நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியின் போது ஸ்டெய்ன் வீசிய ஒரு பந்தினை க்ளென் மெக்ஸ்வெல் உயர்த்தி அடிக்கிறார். இந்நிலையில், விக்கெட் காப்பாளர் க்வின்டன் டீ கொக் மற்றும் ஸ்டெய்ன் ஆகிய இருவரும் பிடியெடுக்க முயல்கின்றனர்.

இந்நிலையில் கொக் பந்தினை பிடியெடுக்க ஸ்டெய்ன் ஏமாற்றத்துடன் திரும்புகிறார்.

விக்கெட் இழப்பினை கொண்டாட அணியின் வீரர்கள் முற்படுகையில் டேல் ஸ்டெய்ன் விக்கெட் காப்பாளர் க்வின்டன் டீ கொக்கை தாக்க முயல்கிறார்.

இதனால் மிகவும் பயந்துபோகும் கொக் அச்சத்துடன் ஸ்டெய்னை எதிர்கொள்கிறார்.

எனினும் ஸ்டெய்ன் அவ்வாறு நடந்துகொண்டது விளையாட்டிற்கு என்பது பின்னர் தெரியவருகிறது, ஸ்டெய்ன் பயத்துடன் நிற்கும் கொக்கினை கட்டித்தழுவுகிறார். இது முதல் முறையல்ல கொக்கினை பலமுறை கிண்டல் செய்துள்ளார் ஸ்டெய்ன்.

stain_kock2 stain_cock


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்