தபால் தொழிற்சங்க ஒன்றியம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்க ஒன்றியம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

தபால் தொழிற்சங்க ஒன்றியம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 9:53 am

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் தொழிற்சங்க ஒன்றியம் அடையாள பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் திணைக்களத்தின் புதிய ஆட்சேர்பு முறைமை காரணமாக பதவி உயர்வு மற்றும் சம்பளம் ஆகிய விடயங்களில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஆட்சேர்பு முறைமையால் இரத்தான பதவிகளை மீள நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தபால் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தமது முக்கிய வேண்டுகோள் என தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தபால் ஊழியர்களின் இந்த கோரிக்கைகள் தொடர்பில் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்னவிடம் வினவியபோது, ஊழியர்களின் அநேகனமான கோரிக்கைகளுக்கு ஏற்கனவே தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏனைய பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான நகர்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என தபால் மாஅதிபர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்