செல்லப் பிராணிகளுக்காக 31,000 டொலர்களை செலவு செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ்

செல்லப் பிராணிகளுக்காக 31,000 டொலர்களை செலவு செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ்

செல்லப் பிராணிகளுக்காக 31,000 டொலர்களை செலவு செய்த பிரிட்னி ஸ்பியர்ஸ்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 6:40 pm

பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது செல்லப் பிராணிகளுக்காக இந்த வருடம் மாத்திரம் 31,000 டொலர்கள் செலவு செய்துள்ளார்.

ஹொலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது செல்லப் பிராணிகளுக்காக அதிகமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அதில் தற்போது பிரிட்னியும் இணைந்துள்ளார்.

தனது வரவு செலவு கணக்கை பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் புது வகையான நாய்களை வாங்க அவர் கிட்டத்தட்ட 13,000 டொலர்கள் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 5,568 டொலர்கள் கொடுத்து ஒரு நாயும், ஜூலை மாதம் 8,212 டொலர்கள் கொடுத்து ஒரு நாயும் அவர் வாங்கியுள்ளார்.

இதோடு, நாய்களின் உடைகளுக்கு மாத்திரம் 1,585 டொலர்களும் பராமரிப்புக்கு 5,202 டொலர்களும் செலவு செய்துள்ளார். மொத்தமாக 31,234 டொலர்களை அவர் செலவு செய்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்