சுப்ரமணிய சுவாமி இலங்கைக்கு வழங்கிய யோசனை; தமிழக முதல்வர் கண்டனம்

சுப்ரமணிய சுவாமி இலங்கைக்கு வழங்கிய யோசனை; தமிழக முதல்வர் கண்டனம்

சுப்ரமணிய சுவாமி இலங்கைக்கு வழங்கிய யோசனை; தமிழக முதல்வர் கண்டனம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 10:02 am

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டாம் என இலங்கைக்கு யோசனை வழங்கியதாக பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்தத் தலைவர் சுப்பிரணியன் சுவாமி வெளியிட்ட கருத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சுப்பிரணியன் சுவாமி தனியார் தொலைகாட்சியொன்றில் வெளியிட்ட இந்த கருத்தானதாக மீனவர் சமுதாயத்திடம் மாத்திரமல்லாது தமிழ்நாட்டு மக்களிடமும் கண்டன உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் நேற்றும் நேற்று முன்தினமும் இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பாரதீய ஜனதாக் கட்சி அல்லது இந்திய அரசின் உத்தியோகபூர்வ கருத்து அல்லவெனத் தான் நம்புவதாகவும் அவரது  கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைப்பதற்காக கச்சதீவையும் பாக்கு நீரிணையில் தமிழக மீனவர்களுக்கு இருக்கும் பாரம்பரிய மீன்பிடி உரிமையையும் மீட்க வேண்டும் என ஜெயலலிதா ஜெயராம் தமது கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்