சிரச்சேதம் செய்வதன் மூலம் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – பரக் ஒபாமா

சிரச்சேதம் செய்வதன் மூலம் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – பரக் ஒபாமா

சிரச்சேதம் செய்வதன் மூலம் அச்சுறுத்தல் விடுக்க முடியாது – பரக் ஒபாமா

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 7:11 pm

சிரச்சேதம் செய்வதன் மூலம் தமது நாட்டை அச்சுறுத்த முடியாது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு அமெரிக்க ஊடகவியலாளரை சிரச் சேதம் செய்வது தொடர்பான காட்சியை ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நீதி பாதுகாக்கப்படும் எனவும் பரக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்க ஊடகவியலளரான ஜேம்ஸ் பொலியை சிரச்சேதம் செய்வது தொடர்பான காணொளியை கடந்த மாதம் ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் வெளியிட்டிருந்தனர்.

இறுதியாக வெளியிடப்பட்டுள்ள காணொளியில் இருந்த பிரித்தானிய பிரஜையையும் கொலை செய்யப் போவதாக ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் அவசர நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கோப்ரா குழுவின் சந்திப்பை பிரித்தானியா நடத்தியுள்ளது.

இதனிடையே தமது நாட்டுப் பிரஜை தொடர்பில் வெளியான காட்சிகளை புலனாய்வு பிரிவினர் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்