கிளிநொச்சியில் வாகன விபத்து; 7 வயது மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் வாகன விபத்து; 7 வயது மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சியில் வாகன விபத்து; 7 வயது மாணவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 6:49 pm

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளான்.

இந்த விபத்து இன்று பிற்பகல் 2.45 அளவில் முழங்காவில், சோலைநிலா பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.

பாடசாலை விட்டு வீதியால் சென்றுகொண்டிருந்த மாணவன் மீது கென்டர் ரக வாகனமொன்று மோதியுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மாணவன் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்.

முழங்காவில், சோலைநிலா பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளான்.

விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், முழங்காவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்