ஐ.தே.க ஆதரவாளர்களிடையே மோதல்; வேட்பாளரின் மகன் வைத்தியசாலையில்

ஐ.தே.க ஆதரவாளர்களிடையே மோதல்; வேட்பாளரின் மகன் வைத்தியசாலையில்

ஐ.தே.க ஆதரவாளர்களிடையே மோதல்; வேட்பாளரின் மகன் வைத்தியசாலையில்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 6:43 pm

ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்கள் இரு தரப்பினருக்கிடையே மொனராகலை நகரில் இன்று முற்பகல் இடம்பெற்ற மோதலில் ஊவா மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவரின் மகன் காயமடைந்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் திஸ்ஸ குட்டியாரச்சி உட்பட அவரின் ஆதரவாளர்கள் சிலர் அதே கட்சியை சேர்ந்த வேட்பாளரான சம்பத் ஜயசூரியவின் மகன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றுள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த தரிந்து ஜயசூரிய சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கட்சி ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்