இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு உதவி ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு உதவி ஆளுநர்கள் நியமனம்

இலங்கை மத்திய வங்கிக்கு நான்கு உதவி ஆளுநர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 1:43 pm

இலங்கை மத்திய வங்கிக்கு புதிதாக நான்கு உதவி ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டி.வசந்த, சி.பி.ஏ.கருணாதிலக்க, எச்.ஏ.கருணாரத்ன மற்றும் திறைசேரியின் தற்போதைய பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரே உதவி ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் நிதிச் சபையினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்கால சவால்களை வெற்றிக்கொள்வதற்காக  இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள திட்டத்தின்கீழ் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்