இலங்கை இளைஞர்களிடையே தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்ட திட்டம்

இலங்கை இளைஞர்களிடையே தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்ட திட்டம்

இலங்கை இளைஞர்களிடையே தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்ட திட்டம்

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 1:36 pm

இலங்கையின் 9 மாவட்டங்களில் தொற்றா நோய்கள் பற்றி இளைஞர்களை விழிப்புணர்வூட்டும் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார அமைச்சு, இளைஞர் விவகார மற்றும் திறன் விருத்தி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஆகியன இணைந்து இதனை முன்னெடுத்துள்ளன.

வட மாகாணத்தில் 5 மாவட்டங்களை உள்ளடக்கி தொற்றா நோய்கள் பற்றி இளைஞர்களை விழிப்புணர்வூட்டும் செயலமர்வொன்று கிளிநொச்சியில் நேற்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த செயலமர்வில் தொற்றா நோய்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன.

ஆரோக்கியமான எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந் செயலமர்வில் 60ற்கும் மேட்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்