இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி பயணித்த கார் அதிவேக வீதியில் விபத்து

இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி பயணித்த கார் அதிவேக வீதியில் விபத்து

இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி பயணித்த கார் அதிவேக வீதியில் விபத்து

எழுத்தாளர் Staff Writer

03 Sep, 2014 | 1:59 pm

இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் பயணித்த கார் தெற்கு அதிவேக வீதியில் விபத்துக்குள்ளானமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாணந்துறைக்கும் தொடங்கொடைக்கும் இடையிலான 21ஆம் மைல் கல் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் பாதுகாப்பு சுவரில் மோதியுள்ளது.

சம்பவம் இடம்பெற்றபோது அந்த வீதியில் பயணித்த எம்பியூலன்ஸ் ஒன்றில் பிரதி இந்திய உயர்ஸ்தானிகர் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

சுரேஷ் ராவ் என்ற குறித்த அதிகாரியின் உடல் நிலை தற்போது தேறியுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்