வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது; தொழிலுக்கு தயாராகும் இராமேஸ்வரம் மீனவர்கள்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது; தொழிலுக்கு தயாராகும் இராமேஸ்வரம் மீனவர்கள்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது; தொழிலுக்கு தயாராகும் இராமேஸ்வரம் மீனவர்கள்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 7:25 pm

நாற்பது நாட்களாக மேற்கொண்டுவந்த வேலை நிறுத்தம் முடிவுக்குவந்துள்ள நிலையில் இராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் கடற்றொழிலுக்கு திரும்புவதற்காக தயாராகி வருகின்றனர்.

இலங்கையில் உள்ள தமது படகுகளை விடுக்க மத்திய மாநில அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழகத்தின் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் ஜூன் 24ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் கடந்த 29ஆம் திகதி இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இலங்கை இந்திய அரச அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதும் படகுகளை விடுவிப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

இரு நாட்டு மீனவர்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இரண்டு நாடுகளினதும் அதிகாரிகள் மீண்டும் இலங்கையில் கூடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.

தொடர் வேலை நிறுத்தத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இராமேஸ்வரத்தில் உள்ள எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலைமையை கருத்திற்கொண்டு நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மீனவர்கள் தீர்மானித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இராமேஸ்வரம் பகுதியில் மீனவர்கள் நாளை முதல் கடற்றொழிலுக்கு செல்லும் எதிர்ப்பார்ப்புடன் வலைகளை தயார்படுத்தும் பணிகளை இன்று முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்