வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸிம்பாவ்பே

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸிம்பாவ்பே

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸிம்பாவ்பே

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 10:11 pm

31 வருடங்களுக்கு பின்னர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியொன்றில் பலம்வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை ஸிம்பாவ்பே அணி வெற்றிகொண்டுள்ளது.

ஹராரேயில் நடைபெற்ற மும்முனை கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 210 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  ஸிம்பாவ்பே 48  ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது.

ஆவது விக்கெட்டுக்காக பிரிக்கப்படாத 55 ஓட்டங்களைப் பகிர்ந்த புரஸ்ப உற்சயா மற்றும் எல்டன் சிக்குப்புரா ஆகியோர் ஸிம்பாவ்பே அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்