பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் தீ

பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் தீ

பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் தீ

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 10:55 am

பதுளையில் வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பதுளை நகரில் தேவாலய வீதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடமொன்றில் நேற்று பிற்பகல் தீ பரவியுள்ளது.

தீயால் கட்டடத்தின் கீழ் மாடி முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தீயால் கட்டடத்தின் இரண்டு மாடிகளில் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

எனினும் தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்