தேர்தல் சட்ட மீறல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – விஜித ஹேரத்

தேர்தல் சட்ட மீறல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளோம் – விஜித ஹேரத்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 8:44 pm

தேர்தல் சட்ட  மீறல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்தார்.

[quote]தேர்தல் சட்டங்கள் மீறப்படுகின்றமை தொடர்பாகவும் அரச ஊழியர்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈ​டுப்படுத்தப்படுவது தொடர்பாகவும் சுட்டிக்காட்டினால் அவர் தனது கவலையை எமக்கு கூறுகின்றார். நாட்டின் சட்டம் தொடர்பில் கேள்வியெழுப்புகின்றனர். நாட்டில் இன்று சட்டம் அமுல்படுத்தப்படுவதில்லை. தேர்தல்கள் ஆணையாளருக்கு சட்டத்தை பாதுகாக்க முடியாவிட்டால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கே எமக்கு செல்ல நேரிடுகின்றது. நாங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வோம். பின்னர் நீதி மன்றத்திற்கும் செல்ல உள்ளோம்.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்