திருகோணமலையை சேர்ந்த இரு மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்

திருகோணமலையை சேர்ந்த இரு மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்

திருகோணமலையை சேர்ந்த இரு மீனவர்கள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 7:34 pm

திருகோணமலை துறைமுகம் அருகே விபத்துக்குள்ளான படகொன்றில் இருந்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

கடற்படையினருக்கு நேற்றிரவு கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் காப்பாற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மீன்பிடிப்பதற்காக கடலுக்குச் சென்றிருந்தபோது இவர்களது படகு விபத்துக்குள்ளானமை தெரியவந்துள்ளது.

திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்களே காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்