தினிந்து யஷேன் லங்காநாத் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

தினிந்து யஷேன் லங்காநாத் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

தினிந்து யஷேன் லங்காநாத் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 9:51 pm

மீகலாவ கட்டுகம்பலகம பகுதியில் தினிந்து யஷேன் லங்காநாத் என்ற சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்

குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர் கடத்தலை திட்டமிட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

இவர் கல்கமுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி உதவி உத்தியோகத்தராக பணியாற்றி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

நான்கரை வயதான தினிந்து யஷேன் லங்காநாத் என்ற சிறுவன் ஒரு கோடி ரூபா கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏற்கனவே நான்கு சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்