ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது – சுனில் வடகல

ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது – சுனில் வடகல

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 8:53 pm

ஊவா மாகாண சபை தேர்தலின் பின்னர் நடைபெறவுள்ளதாக கூறப்படும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதிக்கு போட்டியிடுவதற்கு  காணப்படும் தடைகள் தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

மக்கள் விடுதலை முன்னணி, மேல் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல இது தொடர்பில் விளக்கமளித்தார்.

[quote]அது தெளிவான சட்ட விவாதமாகும். நாட்டில் பொருட் கோடல் கட்டளை சட்டம் என்ற சட்டம் உள்ளது. இந்த கட்டளை சட்டத்திற்கு அமைவாக கடந்த காலங்களுக்கு செல்லுப்படியாகும் வகையில் சட்டத்தை நெறிப்படுத்த முடியாது.18 ஆவது அரசியலமைப்பு என்பது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தை புறம்தள்ளிய திருத்தமாகும். ஆனால்  இந் திருத்தத்தைக் கொண்டு வரும் போது அதில் உள்ளடக்கப்பட வேண்டிய ஒரு விடயத்தை மறந்து விட்டனர். அதாவது கடந்த காலங்களுக்கும் செல்லுப்படடியாகும் அல்லது உள்ளடங்கும் எனற விடயத்தை உள்ளடக்க மறந்து விட்டனர். ஏனெனில் தற்போதைய ஜனாதிபதி 17ஆவது அரசியலமைப்பின் அடிப்டையிலேயே பதவி பிரமானம் செய்துக் கொண்டுள்ளார்.  அப்போது 18ஆவது அரசியலமைப்பு வரவில்லை.  இதனடிப்படையில் அரசியலமைப்பின் 31/2 பிரிவிற்கு அமைவாக  இரண்டாவது பதவி காலத்தில் மாத்திரமே அவரால் இருக்க முடியும். ஆகவே தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் மூன்றாவது பதவிக்காலத்திற்காக ஜனாதிபதியால் போட்டியிட முடியாது.[/quote]


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்