சக்தி – சிரச நிவாரண யாத்திரை ஆரம்பம் (photo)

சக்தி – சிரச நிவாரண யாத்திரை ஆரம்பம் (photo)

சக்தி – சிரச நிவாரண யாத்திரை ஆரம்பம் (photo)

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 7:32 am

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் முன்னெடுத்துள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரை இன்று காலை ஆரம்பமானது.

நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சி, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லப்படவுள்ளன.

religious-observences

வரட்சியால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கான பொருட்களை சேர்க்கும் நடவடிக்கைகள் கடந்த மூன்று நாட்களாக மூன்று மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.

Sirasa-Shakthi-Sahana-Yathra-12

பிறேபூறூக் பிளேசில் அமைந்துள்ள கெப்பிட்டல் மஹாராஜா நிறுவன தலைமையக் காரியாலயம், தெபானாம பன்னிபிட்டியவில் அமைந்துள்ள கலையகம் ,இரத்மலானை – பொறுப்பன வீதியிலுள்ள ஸ்டைன்  கலையகம் , வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபம் மற்றும் கொழும்பு – 13 இல் அமைந்துள்ள விவேகானந்த சபை ஆகிய இடங்களில் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் மத்திய நிலையங்கள் அமைக்க்பட்டிருந்தன.

sirasa-shakthi

14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு பெருமளவிலான மக்கள் நிவாரணப் பொருட்களை கையளித்து மகத்தான ஒத்துழைப்பு வழங்கினர்.

shanayathra

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், அரிசி, பருப்பு, சீனி, பால்மா மற்றும் ரின்மீன் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களை வழங்கி சக்தி சிரச நிவாரண யாத்திரையில் பலரும் பங்கேற்றுக் கொண்டனர்.

இதேவேளை, நிவாரனங்களை வழங்க விரும்பும் மக்கள் சக்தி – சிரச நிவாரண யாத்திரையின் வாகன தொடரணியில் பொருட்கழள வழங்குவதற்கான சந்தர்பமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முதல் கட்ட வாகனத் தொடரணி நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அனுராதபுரம், வவுனியா ஊடாக கிளிநொச்சி பிரதேசத்தை சென்றடையவிருக்கின்றது.

இரண்டாம் கட்ட நிவாரணப் பணி பொலன்னறுவை பிரதேசத்தை நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது.

பேலியகொடை, கிரிபத்கொட, கடவத்தை, யக்கல, வரக்காபொல, குருநாகல், தம்புளை ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தை சக்தி – சிரச நிவாரண யாத்திரை சென்றடையவுள்ளது.

மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள சக்தி – சிரச நிவாரண யாத்திரை கொழும்பிலிருந்து, களுத்துறை, அம்பலாங்கொட, காலி, மாத்தறை, தங்காலை, வீரவில, புத்தல ஊடாக அம்பாறை பிரதேசத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்