சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பு

சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பு

சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் ஆதரவு அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 6:07 pm

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனம் முன்னெடுத்துள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரையின் வாகன தொடரணிகள் கிளிநொச்சி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை நோக்கி பயணத்தை முன்னெடுத்துள்ளன.

வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சி, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

நிவாரண யாத்திரைக்கான மக்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துள்ளதாக எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர், குறிப்பாக பொதுமக்கள் பொருட்களை வழங்குவதற்காக மணித்தியாலக் கணக்கில் காத்திருப்பதை காணக்கூடியதாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று கட்டங்களாக இந்த நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் முதல் கட்ட வாகனத் தொடரணி நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அனுராதபுரம், வவுனியா ஊடாக கிளிநொச்சி பிரதேசத்தை சென்றடையவிருக்கின்றது. கிளிநொச்சி நோக்கி பயணிக்கும் வாகனத் தொடரணி தற்போது சிலாபம் நகரை சென்றடைந்துள்ளது.

சக்தி சிரச நிவாரண யாத்திரையின் மற்றுமொரு வாகன தொடரணி     பேலியகொடை, கிரிபத்கொட, கடவத்தை, யக்கல, வறக்காபொல, குருநாகல், தம்புளை ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தை சென்றடையவுள்ளது.

மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிய மூன்றாவது வாகனத் தொடரணி  களுத்துறை, அம்பலாங்கொட, காலி, மாத்தறை, தங்காலை, வீரவில, புத்தல ஊடாக அம்பாறையை சென்றடையவுள்ளது. அம்பாறை நோக்கி பயணிக்கும் வாகனத் தொடரணி தற்போது அம்பலாங்கொடை நகரை சென்றடைந்துள்ளது.

நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு வாகன பற்றாக்குறை நிலவுகின்றதாக நிவாரண வாகன தொடரணியிலுள்ள எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி நோக்கிய நிவாரண யாத்திரைக்கு  வாகனங்களை தந்து உதவ விரும்புவோர் 0773 660 440 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை, ஏனைய பகுதிகளுக்கு நிவாரண பொதிகளை ஏற்றச் செல்லும் எங்களுடைய தொடரணிக்கு வாகன உதவிகளை வழங்க விரும்புவோர் 0114 896 896 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

10447864_10203832422198351_4873452993157344765_n 10645042_10203832417198226_9190709404782728492_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்