சக்தி-சிரச நிவாரண யாத்திரை; வீதியோரங்களில் பெருந்திரலான மக்கள் திரள்வு

சக்தி-சிரச நிவாரண யாத்திரை; வீதியோரங்களில் பெருந்திரலான மக்கள் திரள்வு

சக்தி-சிரச நிவாரண யாத்திரை; வீதியோரங்களில் பெருந்திரலான மக்கள் திரள்வு

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 2:48 pm

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் முன்னெடுத்துள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரையின் வாகன தொடரணிகள் கிளிநொச்சி, அம்பாறை மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளை நோக்கி பயணத்தை முன்னெடுத்துள்ளன.

SAHANA78

கொழும்பு இரண்டு பிரேபுறூக் பிளேசில் அமைந்துள்ள வரையறுக்கப்பட்ட கெபிடல் மகாராஜா நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்று காலை பயணத்தை ஆரம்பித்த சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கு தொடர்ந்நதும் மக்கள் மகத்தான ஒத்துழைப்பை நல்கி வருகின்றனர்.

நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்கு தற்போது வாகன பற்றாக்குறை நிலவுகின்றதாக நிவாரண வாகன தொடரணியிலுள்ள எமது அலுவலக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

10600442_10203831051964096_5131515774028931207_n

எனவே, கிளிநொச்சி நோக்கிய நிவாரண யாத்திரைக்கு  வாகனங்களை தந்து உதவ விரும்புவோர் 0773 660 440 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதேவேளை, ஏனைய பகுதிகளுக்கு நிவாரண பொதிகளை ஏற்றச் செல்லும் எங்களுடைய தொடரணிக்கு வாகன உதவிகளை வழங்க விரும்புவோர் 0114 896 896 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த இரண்டு தினங்களாக சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சி, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய பிரதேசங்களுக்கு கொண்டுசெல்லப்படுகின்றன.

தொடர்ந்தும் நிவாரண பொருட்களை  வழங்க விரும்பும் மக்கள் சக்தி – சிரச நிவாரண யாத்திரையின் வாகன தொடரணியில் அவற்றை கையளிப்பதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் முதல் கட்ட வாகனத் தொடரணி நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அனுராதபுரம், வவுனியா ஊடாக கிளிநொச்சி பிரதேசத்தை சென்றடையவிருக்கின்றது.

சக்தி சிரச நிவாரண யாத்திரையின் மற்றுமொரு வாகன தொடரணி     பொலன்னறுவை பிரதேசத்தை நோக்கி பயணத்தை முன்னெடுத்துள்ளது

பேலியகொடை, கிரிபத்கொட, கடவத்தை, யக்கல, வறக்காபொல, குருநாகல், தம்புளை ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தை சக்தி – சிரச நிவாரண யாத்திரை சென்றடையவுள்ளது.

அம்பாறையில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை ஏற்றிய வாகனத் தொடரணியும் இன்று காலை கொழும்பு பிறேபுரூக் பிளேசிலுள்ள வரையறுக்கப்பட்ட கெபிட்டல் மகாராஜா நிறுவனத் தலைமையகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்ததது.

இந்த வாகனத் தொடரணி   களுத்துறை, அம்பலாங்கொட, காலி, மாத்தறை, தங்காலை, வீரவில, புத்தல ஊடாக அம்பாறையை சென்றடையவுள்ளது.

இந்த வாகனத் தொடரணியிடமும் மக்கள் தொடர்ந்தும் நிவாரணப் பொருட்களை வையளித்து வருகின்றனர்.

வரட்சியால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள சக்தி சிரச நிவாரண யாத்திரைக்கான பொருட்களை சேர்க்கும் நடவடிக்கைகள் கடந்த மூன்று நாட்களாக மூன்று மத்திய நிலையங்களில் இடம்பெற்றன.

14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு பெருமளவிலான மக்கள் நிவாரணப் பொருட்களை கையளித்து மகத்தான ஒத்துழைப்பு வழங்கினர்.

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், அரிசி, பருப்பு, சீனி, பால்மா மற்றும் ரின்மீன் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களை வழங்கி சக்தி சிரச நிவாரண யாத்திரையில் பலரும் பங்கேற்றுக் கொண்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்