கோலி – ஸ்டோக்ஸ் இடையே வாய்த்தர்க்கம்

கோலி – ஸ்டோக்ஸ் இடையே வாய்த்தர்க்கம்

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 11:51 am

நேற்று நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் வீராட்கோலியும், இங்கிலாந்து வேகப்பந்து வீரர் பென் ஸ்டோக்சும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

போட்டியில் 26 ஆவது ஓவரில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் வீராட் கோலி 40 ஓட்டத்தை பெற்றவேளையில் ஆட்டம் இழந்தார். மைதானத்தை விட்டு வெளியேறும்போது அவரை பார்த்து பென் ஸ்டோக்ஸ் ஏதோ முனு முனுத்தார். இதை கேட்ட கோலியும் பதிலுக்கு ஏதோ வார்த்தைகளை கூறி மட்டையை உயர்த்தினார். இருவருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.

மைதானத்தில் இருந்த நடுவர்களும், இங்கிலாந்து தலைவர் குக்கும் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள். என்ன வார்த்தைகளை பயன்படுத்தி இருவரும் மோதிக் கொண்டனர் என்று தெரியவில்லை.

முன்னதாக இந்த போட்டியின் தொடக்கத்தில் இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனை இந்திய ரசிகர்கள் கேலி கிண்டல் செய்து வெறுப்பேற்றினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்