கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் ஏழு பேர் கைது

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் ஏழு பேர் கைது

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தில் ஏழு பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 1:59 pm

கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தின் நான்கு ஊழியர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு தபால் பொதி ஒனடறிலிருந்த பொருட்களை களவாடிய குற்றச்சாட்டிற்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்  பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் கொழும்பு மத்திய தபால் பறிமாற்றகத்தின் தபால் நிலைய பொறுப்பதிகாரிகள் இருவரும், அலுவலக தொழிலாளர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

டுபாயிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தபால் பொதியிலிருந்த 123 கையடக்க தொலைப்பேசிகளும் 04 டெப்களும் சந்தேகநபர்களால் கைமாற்றப்பட்டுள்ளன.

ஒரு இலட்சத்து 14 ஆயிரம் ரூபா  பணத்தை பெற்றுக் கொண்டு சந்தேகநபர்கள் பொருட்களை பறிமாறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித் தபால் பொதியிலிருந்த பொருட்களை எடுத்துக் கொண்டதன் பின்னர் பொதிக்குள் கொங்ரீட் கற்களை நிரப்பி மீள பொதி செய்யப்பட்டதாக விசாரணைகளில்  ரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தபடவுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்