ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எட்டு பேர் கைது

ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எட்டு பேர் கைது

ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் எட்டு பேர் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2014 | 8:03 am

ஊவா மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளுக்கு அமைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பில் 53 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 87 முறைப்பாடுகள் தேர்தல் செயலகத்தில் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மொனராகலை மாவட்டத்தில் 56 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகத்தின் முறைப்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

மேலும்  தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள்  தொடர்பான 13 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளது.

அரச உத்தியோகத்தர்களை தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றமை தொடர்பில் 14 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது..


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்