மருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

மருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

மருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் பேச்சுவார்த்தை தோல்வி

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 10:48 am

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களுக்கும், சுகாதார பிரதியமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்துள்ளது.

இந்த நிலைமையின் கீழ் வைத்தியசாலைகளில் பணிபகிஷ்கரிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிறைவுகாண் மருத்துவவியல் வல்லுநர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த பணிபகிஷ்கரிப்பிற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

14 நாட்களுக்கு அமுலாகும் வகையில், ஆறு தொழிற் சங்கங்களின் பணிபகிஷ்கரிப்பிற்கு நீதவான் சுஜாதா அலகப்பெரும இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்ற நோயாளர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை பரிசீலித்த பின்னரே நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நாடு முழுவதுமுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே பணிபகிஷ்கரிப்பை இடைநிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனையடுத்து 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதுடன், செப்டெம்பர் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்