தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; 14 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; 14 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து; 14 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 6:06 pm

தெற்கு அதிவேக வீதியின் பின்னதூவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பகல் 12.30 அளவில் காலியிலிருந்து மஹரகமவுக்கு பயணித்த  இலங்கை போக்குவரத்து சபை பஸ் பின்னதூவ வெளியேற்றம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது தனியார் பஸ் ஒன்று அதனுடன் மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஏழு பெண்களும், சிறுவன் ஒருவனும், ஆறு  ஆண்களும் அடங்குகின்றனர்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்