தீர்மானமிக்க போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 103

தீர்மானமிக்க போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 103

தீர்மானமிக்க போட்டியில் இலங்கைக்கு வெற்றி இலக்கு 103

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 2:11 pm

இலங்கைக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான தீர்மானம் மிக்க ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  துடுப்படுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் சற்று தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது

முதலில் துடுப்படுத்தாடிவரும் பாகிஸ்தான் அணி 32.1 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளை இழந்து 102 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ரன்கிரி தம்புள்ளை மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானத்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 4 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பில் மூன்று வீரர்கள் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டங்களைக் கடந்துள்ளனர். ஏனைய அனைத்து வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி சார்பில் அதிக ஓட்டமாக பவாட் அலாம் மாத்திரம் ஆட்டமிழக்காமல் 38 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் திசர பெரேரா 4 விக்கெட்களையும் தம்மிக்க பிரசாத் 2 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்