தபால்மூல வாக்களிப்பிற்கு11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகுதி இழப்பு

தபால்மூல வாக்களிப்பிற்கு11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகுதி இழப்பு

தபால்மூல வாக்களிப்பிற்கு11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தகுதி இழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 6:48 pm

ஊவா மாகாண சபைத் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்கான தகுதியை 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இழந்துள்ளனர்.

தபால் மூலம் வாக்களிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 4 ஆம் மற்றும் 5 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிடுகின்றது.

குறிப்பிட்ட இரண்டு தினங்களிலும் தபால்மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டெம்பர் 11 ஆம் திகதி அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.எல்.ஏ. ரத்னாயக்க தெரிவிக்கின்றார்.

இதேவேளை, ஊவா மாகாணத்தில் சட்டவிரோத தேர்தல் பிரசார பதாகைகள் மற்றும் கட்சி அலுவலகங்களை அகற்றும் நடவடிக்கைகளின்போது மொனராகலை மாவட்டம் குறித்து உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என சில அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்