சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் அமோக ஆதரவு (photo)

சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் அமோக ஆதரவு (photo)

சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு மக்களின் அமோக ஆதரவு (photo)

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 7:12 pm

வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் முன்னெடுத்துள்ள சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கு பெருமளவிலான மக்கள் நிவாரணப் பொருட்களை கையளித்து மகத்தான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

Sirasa-Shakthi-Sahana-Yathra-51

பிறேபுரூக் பிளேஸிலுள்ள தலைமைக் காரியாலயம், பன்னிப்பிட்டி கலையகம் , இரத்மலானையிலுள்ள ஸ்டைன் கலையகம், வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபம் மற்றும் கொழும்பு – 13 இல் அமைந்துள்ள விவேகானந்த சபை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை சேகரிக்கும் நிலையங்களுக்கு சமூகமளித்து நீங்களும் நிவாரணப் பணியில் இணைந்துக்கொள்ள முடியும்.

Sirasa-Shakthi-Sahana-Yathra-71

வெள்ளவத்தை இராமகிருஸ்ண மிஷன் மற்றும் கொழும்பு 13 விவேகானந்த சபை ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் இன்று இரவு எட்டு மணி வரை நீங்களும் நிவாரணப் பொருட்களை கையளிக்க முடியும்.

Sirasa-Shakthi-Sahana-Yathra-10

தொடர்ந்தும்  நிவாரணப் பொருட்களை பிறேபுரூக் பிளேஸிலுள்ள தலைமைக் காரியாலயத்தில் ஒப்படைக்க முடியும் என்பதையும் அறியத்தருகின்றோம்.

Sirasa-Shakthi-Sahana-Yathra-71

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், அரிசி, பருப்பு, சீனி, பால்மா மற்றும் ரின்மீன் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களை எமது நிலையங்களில் கையளிக்க முடியும்.

இதேவேளை, வெளி மாவட்டங்களில் உள்ள மக்களிடம் இருந்தும் சக்தி – சிரச நிவாரண யாத்திரைக்கான உதவிப் பொருட்களை சேகரிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Sirasa-Shakthi-Sahana-Yathra-21

சக்தி – சிரச நிவாரண யாத்திரை தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக 0114 896 896 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள்.

இதேவேளை, வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் சக்தி – சிரச நிவாரண யாத்திரை நாளை புறப்படவுள்ளது.

Sirasa-Shakthi-Sahana-Yathra-41

நிவாரணப் பொருட்கள் கிளிநொச்சி, அம்பாறை, பொலன்னறுவை பிரதேசங்களுக்கு நாளை கொண்டுசெல்லப்படவுள்ளன.

Sirasa-Shakthi-Sahana-Yathra-12

நிவாரணப் பொருட்களை ஏற்றிய வாகனத் தொடரணிகள் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா நிறுவன தலைமையக் காரியாலய வளாகத்திலிருந்து நாளை காலை 6 மணியளவில் புறப்படவுள்ளது.

மூன்று கட்டங்களாக இந்த நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முதல் கட்ட வாகனத் தொடரணி நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், அனுராதபுரம், வவுனியா ஊடாக கிளிநொச்சி பிரதேசத்தை சென்றடையவிருக்கின்றது.

Sirasa-Shakthi-Sahana-Yathra-15
இரண்டாம் கட்ட நிவாரணப் பணி பொலன்னறுவை பிரதேசத்தை நோக்கி முன்னெடுக்கப்படவுள்ளது.

பேலியகொடை, கிரிபத்கொட, கடவத்தை, யக்கல, வரக்காபொல, குருநாகல், தம்புளை ஊடாக பொலன்னறுவை பிரதேசத்தை சக்தி – சிரச நிவாரண யாத்திரை சென்றடையவுள்ளது.

மூன்றாம் கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள சக்தி – சிரச நிவாரண யாத்திரை கொழும்பிலிருந்து, களுத்துறை, அம்பலாங்கொட, காலி, மாத்தறை, தங்காலை, வீரவில, புத்தல ஊடாக அம்பாறை பிரதேசத்தை சென்றடைவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்