கடமைக்கு சமூகமளிக்குமாறு தொழில் வல்லுநர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள்

கடமைக்கு சமூகமளிக்குமாறு தொழில் வல்லுநர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள்

கடமைக்கு சமூகமளிக்குமாறு தொழில் வல்லுநர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 7:23 pm

நீதிமன்ற உத்தரவை மதித்து கடமைக்கு சமூகமளிக்குமாறு நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களிடம் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அப்பாவி நோயாளர்களை மேலும் அசௌரியத்திற்குள்ளாக்காது உடனடியாக கடமைக்கு திரும்புமாறு அமைச்சின் செயலாளர் சுதர்மா கருணாரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது

கோரிக்கைகள் தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவிருந்த தருணத்தில் நோயாளர்களின் உயிரை பணயமாக வைத்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபிடுகின்றமை அநீதியானதாகும் என  அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நோயாளர்கள் நீதிமன்றத்தை நாடுவதற்கு நேரிட்டுள்ளமை சுகாதார சேவைக்கும், சுகாதார துறையில் தொடர்புபட்டுள்ள அனைத்து தரப்பினருக்கும் மரியாதைக்குரிய நிலைமை அல்லவெனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு எதிராக நோயாளர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் நேற்று தொழிற்சங்க நடவடிக்கைக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்