இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாகவும் இன்று முன்னெடுப்பு

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாகவும் இன்று முன்னெடுப்பு

இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இரண்டாம் நாளாகவும் இன்று முன்னெடுப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 9:03 am

இலங்கை – இந்திய அதிகாரிகளுக்கு இடையில் மீனவர் விவகாரம் தொடர்பில் புதுடில்லியில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தை தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடரவுள்ளது.

மன்னார் வளைகுடா பகுதியில் இருநாட்டு மீனவர்களும் சட்ட ரீதியில் மீன்பிடிப்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்படுவதாக கடற்றொழில் அமைச்சின் தமிழ் ஊடக இணைப்பாளர் எஸ்.டி. சதாசிவம் குறிப்பிட்டார்.

இதேவேளை, இருநாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கான நடவடிக்கை மற்றும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிப்பது தொடர்பாகவும் இந்த பேச்சுவார்த்தயில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்