இராமேஸ்வரம் மீனவர்களின் நீண்டநாள் போராட்டம் நிறைவு

இராமேஸ்வரம் மீனவர்களின் நீண்டநாள் போராட்டம் நிறைவு

இராமேஸ்வரம் மீனவர்களின் நீண்டநாள் போராட்டம் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2014 | 6:23 pm

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டுவந்த வேலை நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

படகுகளை விடுவித்தல் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 37 நாட்களாக இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தப் பேராட்டத்தை மேற்கொண்டுவந்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு இதுவரை முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை என தமிழக மீனவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர் வேலை நிறுத்தம் காரணமாக வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படுவதை கருத்திற்கொண்டு வேலை நிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் கடற்றொழிலுக்கு செல்வதற்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கு அமைய இலங்கை சிறையில் இருந்த தமிழக மீனவர்கள்  விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் தமிழக மீனவர்களின் 62 படகுகள் தொடர்ந்தும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்