நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

நிறைவுகாண் மருத்துவவியல் தொழில் வல்லுனர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 6:39 pm

நிறைவுகாண் மருத்துவவியல் தொழிற்சங்க ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பை தடைசெய்யும் வகையில், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

14 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில், நீதிபதி சுஜாதா அழகப்பெருமவினால் 06 தொழிற்சங்கங்களுக்கும் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்ற நோயாளர் ஒருவர் தாக்கல்செய்த மனுவை ஆராய்ந்ததன் பின்னர், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிறைவுகாண் மருத்துவவியல் தொழிற்சங்க ஒன்றியத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, தொழிற்சங்க நடவடிக்கையை தடைசெய்யுமாறு அந்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, 14 நாட்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதவான், பிரதிவாதிகளை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்