நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எதிரான மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எதிரான மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளுக்கு எதிரான மனுவின் தீர்ப்பு ஒத்திவைப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2014 | 7:47 pm

நாட்டில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்தும் தீர்மானத்திற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவின் தீர்ப்பு எதிர்வரும் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இலங்கைக்கு புகலிடம் கோரி வருகைதந்திருந்த பாகிஸ்தான் பெண்கள் இருவர் இந்த மனுவை தாக்கல்செய்திருந்தனர்.

இதற்குமுன்னர் இந்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் பாகிஸ்தான் பிரஜைகளை நாடு கடத்தும் அரசாங்கத்தின் தீர்மானத்தினை இடைநிறுத்தியிருந்தது.

மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட இந்த இடைக்கால தடையுத்தரவை நீக்குமாறு கோரி, இந்த விடயங்களை தெளிவுபடுத்தியதாக பிரதி சொலிசிஸ்டர் நாயகம் ஜனக்க சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு, இலங்கைச் சட்டங்கள் உள்ளடங்காது என அவர் நீதிமன்றத்தினை தெளிவுபடுத்தினார்.

குறித்த பாகிஸ்தான் பிரஜைகள் 17 பேரும் மலேரியா நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் என மேலதிக சொலிசிஸ்டர் நாயகம் குறிப்பிட்டார்.

மலேரிய நோயை நாட்டிலிருந்து இல்லாதொழித்துள்ளதன் காரணத்தினால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்